வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளத்தில் இசக்கி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் இசக்கி தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் இசக்கி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன இருசக்கர வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திருட்டு போன வாகனத்தின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.