வீட்டு மாடியில் வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் சொர்ணகாளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக் முடித்துவிட்டு கோவையில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான செட்டிகுறிச்சியிலேயே கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெரியசாமி தனது வீட்டின் மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.