Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கா இப்படி பண்ணிட்டாரு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக முதியவரை கடப்பாரையால் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மைக்செட், பாத்திரங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவரும் கார் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு முன்பாக நின்று தள்ளுவண்டியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வள்ளிமுத்து கடப்பாரையால் பாலசுப்பிரமணியனை  தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் பாலசுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வள்ளிமுத்துவை கைது செய்தனர்.

Categories

Tech |