Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதுக்கு இப்படியா செய்யணும்….? மருமகனின் வெறிச்செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

குடும்பத்தகராறு காரணமாக மருமகன் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் ராஜலட்சுமி என்பவர் வசித்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான இவரது மகள் கல்லத்தி பகுதியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து ராஜலட்சுமிக்கும், மருமகனான அபிமன்யுவின் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறில் ஆத்திரமடைந்த அபிமன்யு தனது மாமியாரான ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபிமன்யுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |