Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு செஞ்சா இப்படித்தான்…. ரவுடிகளின் அட்டகாசம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளின் பட்டியல் தயாராகியுள்ளது.

இதனையடுத்து விக்ரமசிங்கபுரம், பத்தமடை, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி, சுத்தமல்லி, ஆகிய பகுதிகளில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 10 நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் கொலை வழக்குகள் மட்டுமன்றி கடத்தல், கஞ்சா விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |