Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடி மாதம் என்றாலே சிறப்பு தான்” திறக்கப்பட்ட கோவில் நடை…. பங்கேற்ற திரளான பக்தர்கள்….!!

ஆடிமாத பிறப்பையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி விசுவரூப தரிசனத்திற்காக கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு அஸ்திரங்கள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கோவிலுக்கு வந்த  ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோமாதாவை வலம் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

.

Categories

Tech |