மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 168-ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவில் இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக பல நாடுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல கட்டிடங்களும் வெள்ள நீரில் மூழ்கி இடிந்து விழுந்துள்ளது. அதில் பலி எண்ணிக்கை 168-ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதில் பலரும் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ஜெர்மனியில் ராணுவ வீரர்கள், 15 ஆயிரம் காவல்துறையினர், அவசரநிலை பணியாளர்கள் என பலரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் 27 பேர் பெல்ஜியத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.