டீ கடையில் பணம் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கட்டளைப்படி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் சித்து வருகின்றார். இவர் இரட்டைபாலம்-கல்மண்டபம் சாலையில் டீக்கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து பெருமாள்சாமி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அதன்பின் மறுநாள் காலையில் பெருமாள்சாமி கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து பெருமாள்சாமி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம், சிகரெட், பிஸ்கட் மற்றும் பொருட்கள் திருட்டு போனது தெரிவந்தது. இதுகுறித்து பெருமாள்சாமி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.