Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக போராட்டம் ஒத்திவைப்பு” ஸ்டாலின் அறிவிப்பு….!!

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் TR பாலு ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |