Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூலை 19…!!

சூலை 19  கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.[1]

484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.

998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.

1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.

1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.

1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.

1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.

1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.

1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.

1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.

1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.

1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.

1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]

1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.

1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.

1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.

1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.

1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.

1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.

இன்றைய தின பிறப்புகள்

810 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870)

1827 – மங்கள் பாண்டே, இந்திய சிப்பாய் (இ. 1857)

1846 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1919)

1893 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. 1930)

1894 – கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (இ. 1965)

1898 – எர்பர்ட் மார்குசே, செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1979)

1909 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (இ. 2004)

1921 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2011)

1938 – ஜயந்த் நாரளீக்கர், இந்திய வானியலாளர், வானியற்பியலாளர்

1948 – ஓக்ரம் இபோபி சிங், மணிப்பூர் அரசியல்வாதி

1948 – அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

1949 – கலேமா மொட்லாந்தே, தென்னாப்பிரிக்காவின் 3வது அரசுத்தலைவர்

1955 – ரோஜர் பின்னி, இந்தியத் துடுப்பாளர்

1961 – காம்ப்பெல் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1973 – ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி

1976 – பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஆங்கிலேய நடிகர்

1979 – மாளவிகா, இந்தியத் திரைப்பட நடிகை

1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்

1814 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய மாலுமி (பி. 1774)

1947 – ஆங் சான், பர்மிய அரசியல்வாதி (பி. 1915)

1947 – சுவாமி விபுலாநந்தர், ஈழத்து தமிழிசை ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், துறவி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1892)

1987 – ஆதவன், தமிழக எழுத்தாளர் (பி. 1942)

2010 – டேவிட் வாரன், ஆஸ்திரேலிய அறிவியலாளர் (பி. 1925)

2012 – உமாயூன் அகமது, வங்காளதேச இயக்குநர் (பி. 1948)

2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்

மாவீரர் நாள் (மியான்மர்)

விடுதலை நாள் (நிக்கராகுவா)

Categories

Tech |