Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்குள் சென்ற பூசாரி…. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரின் மையப்பகுதியில் ஸ்ரீ சொக்கநாதர் கோவில் இருக்கின்றது. இந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரியாக தேவி செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலில் வழிபாடு நடத்த பூசாரி வந்தபோது முன்பக்க கதவு உடைந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பின் கோவிலுக்குள் சுற்றிபார்த்த போது பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு கோவில் பூட்டை உடைக்காமல் காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே குதித்து கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் மூல தெய்வமான சொக்கநாதர் சன்னதி உண்டியலில் மர்மநபர்கள் கை வைக்கவில்லை. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |