தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட 3 டன் துணிகள் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பரிகாரம் செய்த துணிகளை பக்தர்கள் ஆற்றில் போட்டு செல்வது வழக்கமா இருந்துள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் துணிகளை ஆற்றில் போட சுகாதாரத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தடைகளை மீறி சில பக்தர்கள் மட்டும் துணிகளை ஆற்றிலேயே விட்டு செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார பணியாளர்கள் ஆற்றில் போடப்பட்ட 3 டன் துணிகளை அகற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை ஆய்வாளர் கணேசன் ஆலோசனைப்படி அகற்றப்பட்ட துணிகள் அனைத்தும் நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.