Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடி போன ஆளும் கட்சி..”ஆளுநர் சந்திப்பு,அமித்ஷா விளக்கம்”.. கட்சிதமாக பயன்படுத்திய முக.ஸ்டாலின் …!!

இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற இருக்கிறது என்பதை நாங்கள் விளக்கிச் சொன்னோம்.

அதைத் தொடர்ந்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது , எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது  என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்.இதை மத்திய அரசு சொல்ல உன் முன் வருமா என்று நாங்கள் கேட்ட நேரத்தில் , அவர் நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் எனவே உறுதியாக மத்திய அரசு சொல்லித்தான் நான் உங்களிடத்தில் சொல்கிறேன்  என்று தெரிவித்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்ததாக தெரிவித்தார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 3 நாள் கழித்து நான் சொல்வது தவறாக புரியப்பட்டது என்று சொன்னது  ஒரு முன்னோட்டமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் , ஏற்கனவே தபால் நிலையம் , ரயில் நிலையம் ஊழியர்கள் தேர்வில் இந்தி திணிப்பை  எதிர்த்து  போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதே போல அமித்ஷாவின் இந்த அறிவிப்பும் இப்போது நாங்க அறிவித்து இருக்ககூடிய போராட்டத்திற்கு , உள்ளபடியே திமுகவுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஒருவழியாக ஆளுநர் சந்திப்பு மற்றும் இந்தி குறித்து அமித்ஷாவின் விளக்கத்தை தனக்கு சாதகமாக கட்சிதமாக முக.ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டதால் ஆளும் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories

Tech |