தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன. இதனால்தனியார் பள்ளிகளில் முழு பள்ளிக்கட்டணமும் பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் முதல் தவணை 40% இரண்டாவது தவணை 35% என 75% கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் தவணை 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31 க்குள்ளும், மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை நேரடி வகுப்பு தொடங்கிய பின்னர் இரண்டு மாதங்களிலும் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை வசூல் செய்வது குறித்து கொரோனா தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.