Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல்” உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம்…!!

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற ஒரு கேள்வி தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் முக்கியமாக நடத்தப்படும் என்று தொடர்ச்சியாகவே பல்வேறு அமைச்சர்கள் தங்களது பேட்டி வாயிலாகத் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே மேற்கொண்டு வருகிறது.

மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்பது இருக்கிறது.இந்த அடிப்படையில் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நகராட்சிகள் , டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் இருக்கக்கூடிய ஒன்றிய அளவில்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் தற்போது ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இது தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை மாநகராட்சியின் எண்ணிக்கை ஆவடியையும் சேர்த்து தற்போது 13 ஆக உள்ளது. பஞ்சாயத்து யூனியன் , நகராட்சிகள், பஞ்சாயத்து என உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என்று அதற்கான உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விதித்துள்ளது. இதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |