கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் வெங்கடாசலபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மர்மநபர்கள் 2 பேர் புகுந்து உண்டியலிருந்து 900 ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். அந்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தெற்குப்பட்டி பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரின் நண்பர் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் மாடசாமியை கைது செய்தனர் மற்றும் அவரை நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.