Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு வெடிக்குண்டுடன் காட்டுக்குள் சுற்றிய வேட்டையர்கள்…. அதிரடியாக கைது செய்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின்  நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம கிருஷ்ணன் ஆகியோரை பிடித்த வனத்துறையினர் கைது  செய்தனர். 

Image result for arrest

இதை  தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 அறிவால் 3 செல்போன்கள் ஒரு பைக் 5 நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் பல முறை வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசங்களை விற்பனை செய்து வந்தவர்கள் என்பதும் சுந்தரராஜன் பகுதியை சேர்ந்த வன விலங்குகளை வேட்டையாடுவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |