குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொரவி காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழுதாவூர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது சீராக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.