Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறு சிறு சேட்டைகள் செய்ததால்….. சித்தியின் கொடூர செயல்…. விசாரணையில் அம்பலமான நாடகம்….!!

பெண் குழந்தையை சித்தி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவர்களின் குழந்தை நசீபா என்பவரை ஷமிலுதீனின் தங்கை பராமரித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அதன் பின் நஷீபா தனது தந்தை மற்றும் சித்தியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மர்மமான முறையில் குழந்தை நஷீபா வீட்டில் இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் சித்தியான அப்ஷனா போன்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அப்ஷனா தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் நஷீபாவை பராமரிக்க தவறிவிட்டார்.

இதனால் தாய் இல்லாத ஏக்கத்தில் இருந்த பெண் குழந்தை நஷீபா அடிக்கடி தனது சித்தியிடம் சென்று சேட்டைகள் செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்ஷனா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நசீபாவின் வாயை கைகளால் பொத்தி அவரை பலமாக தாக்கியுள்ளார். மேலும் அவர் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தண்ணீர் குடிப்பதற்காக சிலாப்பில் ஏறிய குழந்தை தவறி கீழே விழுந்ததால் இறந்துவிட்டார் என அப்ஷனா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்ஷனா அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அப்ஷனாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |