Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 நிதியுதவி உங்களுக்கு கிடைக்கலையா…? அப்ப இதை உடனே பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து எட்டாவது தவணை செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒருசில விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்து வருகிறது. தங்களது விவரங்களைத் தவறாகப் பதிவிட்டால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிடுவதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் பணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்று Farmer Corner என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Edit Aadhaar Details என்பதை கிளிக் செய்து உங்களது ஆதார் நம்பரைப் பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு Submit கொடுக்க வேண்டும். உங்களது பெயர் போன்ற விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் இதில் நீங்கள் திருத்திவிடலாம். ஒருவேளை திருத்தவே முடியாத பிழைகள் இருந்தால் வேளாண் துறை அலுவலகத்தைப் பார்வையிட்டு அதைச் சரிசெய்ய வேண்டும்.

Categories

Tech |