நாமக்கல் மாவட்டத்தில் மின் கம்பியில் அடிபட்டு பெண் மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பள்ளி சாலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்திற்கு மேலே நேற்று ஒரு பெண் மயில் அமர்ந்திருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் லேசான மலை பெய்ய தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதும் மயில் அங்கிருந்து பறந்துள்ளது.
அப்போது அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. மேலும் மின்சாரம் பாய்ந்ததால் அந்த பெண் மயில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் உடற்கூராவிற்காக நாமக்கலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.