Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா அவ்வளவு தான்…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆதார்-பான் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேலும் ஒரு சில வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஆதார் – பான் கார்டு சீக்கிரம் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய  வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர் வங்கி  சேவைகளை தடையின்றி பயன்படுத்த வேண்டும் என்றால் ஆதார்-பான் இணைப்பை  உடனடியாக செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் வழியாக ஆதார்-பான் இணைக்க www.incometax.gov.in இணையதளத்துக்கு செல்லவும். அதில் ‘Link Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்து இணைத்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |