சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதே பகுதியில் வசிக்கும் காமராஜர் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காமராஜை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.