இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.
அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமாகும் வகையில் களமிறங்கிய இஷன் கிஷன் இன்றைய போட்டியிலேயே முதல் பந்திலே சிக்சர் அடித்து தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 262 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் இந்திய அணி தற்போதைய நிலையில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இஷன் கிஷன் 42 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 8 பவுண்டரி 2 சிக்சர்கள் சிக்சர்கள் அடங்கும்.
T20, ஒருநாள் போட்டி என அறிமுக போட்டியின் முதல் பந்திலே இஷான் கிஷன் 4, 6என அடித்து ஆடியது பல கிரிக்கெட் ஜாம்பவான்களையும் கவர்ந்துள்ளது.