Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1 லட்சம் மதிப்புள்ள 34 செல்போன்… உரிமையாளருக்கு காத்திருந்தக அதிர்ச்சி… பெண் உட்பட 3 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்துள்ளா புதுசத்திரத்தில் அரவிந்தன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் 3 செல்போன் கடைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விற்பனையை முடித்துவிட்டு அரவிந்தன் 3 கடைகளையும் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த 1 லட்சம் மதிப்புள்ள 34 செல்போன்கள் திருடுபோய் இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அரவிந்தன் உடனடியாக சேர்ந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த புதன்சந்தை சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்த சாந்தி(20) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரத் ஆகியோர் அவர்களது கூட்டாளிகளான கணேசன்(26), இசக்கி(29), விஷ்ணு(21) ஆகிய 5 பேருடன் இணைந்து செல்போனை திருடி சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடிக்கு விரைந்து சென்ற போலீசார் பதுங்கியிருந்த சாந்தி, சரத், விஷ்ணு ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் திருடிய 34 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள கணேசன் மற்றும் இசக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |