Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… பிரசவத்திற்கு வந்த சிறுமி… காவல்நிலையத்தில் மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஜெயக்குமார் மீது குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |