லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் தொகுதியில் முகமது உசேன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது லாரியில் கடையநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.