சட்டவிரோதமாக போடப்பட்ட ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாலந்துறை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக போடப்பட்ட 1000 லிட்டர் சாராய ஊறலை பார்த்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.