தனுசு ராசி அன்பர்களே.! தனவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும்.
இன்று சிறிய முயற்சி அதிக வெற்றி ஏற்படுத்திக் கொடுக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து அன்பு பாராட்டுவார்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளக் கூடிய காலக் கட்டங்கள் வந்துவிட்டது. உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் சொன்னவர்கள் இப்போது தலைகுனிய கூடும். நட்பு மத்தியில் நல்ல பெயர் உருவாகிக்கொண்டிருக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கின்றது. பணவரவு தாராளமாக இருக்கும். தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்து பணத்தை விரயம் செய்ய வேண்டாம். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொல்லைகள் தீர்ந்து விடும். பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். திடீரென்று கோபங்கள் வரும்.
அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். தனவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். வீண் ஆசைகள் தோன்றும். சில விஷயங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக இருக்க வேண்டும். உறவினரின் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசவேண்டும். மாணவர்களுக்கு இன்று தைரியமான நாள். மாணவர்கள் ஒரு செயலை செய்துவிட்டால் சிறப்பாக இருப்பீர்கள். விளையாட்டிலும் கல்வியிலும் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்