தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான பார்கள், சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.