இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.
கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை. இருந்தாலும் சில விற்பனையாளர்கள் டியூக் 790 மாடலை ரூ. 30,000 கட்டணத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த கே.டி.எம். டியூக் 790 மாடலில் எலெக்டிராணிக் ரைடர் ஏய்டுகள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிராக் மோட், குவிக் ஷிஃப்டர் பிளஸ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கே.டி.எம். டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம்., 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி , டிரான்ஸ்மிஷனிற்கு இருவழி குவிக் ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.