Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்த சௌத் ஆப்பிரிக்கா.!!

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.  

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Image

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரீஷா ஹென்டிரிக்சும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே டிகாக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரீஷா ஹென்டிரிக்ஸ் 6 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் வாஷிங்க்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து இறங்கிய டெம்பா பவுமாவும், குயிண்டன் டிகாக்கும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

Image

சிறப்பாக ஆடிய டிகாக் அரைசதம் கடந்த நிலையில் 52 (37) ரன்களில் ஆட்டமிழக்க, அதை தொடர்ந்து வான் டர் டுசனும் 1 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு டேவிட் மில்லரும், பவுமாவும் சிறிதுநேரம் பொறுப்பாக ஆடினார் .

Image

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 (43) ரன்னில் தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். கடைசியில் ஹர்டிக் பாண்டியாவின் 18வது ஓவரில் முதல் பந்தில்  அடிக்க முயன்ற மில்லர் 18 ரன்னில் போல்ட் ஆனார்.

Image

இறுதியில் சௌத் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. பெலுக்வாயோ 8 ரன்னிலும், பிரிட்டோரியஸ் 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.  இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இதையடுத்து இந்திய அணி 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாட உள்ளது.

 

Categories

Tech |