நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மட்டுமே முக்கியம். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம். Uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற இணையத்தளத்தில் ஆதார் கையேட்டின் PDF கோப்பு உள்ளது.
இந்த கையேட்டில் ஆதாரில் பெயரை மாற்றுவதில் எந்த வகையான திருத்தங்களைச் செய்யலாம் என்ற முழுமையான விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஆவணம் இல்லாமல் இமெயில் ID-ஐ மாற்றலாம் அல்லது சேர்க்கலாம். இதற்கு ஆதார் சேவா கேந்திரா 50 ரூபாய் வசூல் செய்யும். அதனால் மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.