அமேசன் பிரைம் விற்பனை காலத்தில் 2,400 க்கும் மேற்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்துகின்றது. அமேசான் நிறுவனம் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு விற்பனை காலத்தை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது. சிறு தொழில்களின் உற்பத்தி படைப்புகளை விற்பனை செய்வதற்கான இந்த சிறப்பு விற்பனை காலம் ஜூலை 26, 27 தேதிகளில் நடைபெற உள்ளது. வீட்டு பொருட்கள், கிச்சன் பொருட்கள், அழகு சாதனங்கள், மளிகை பொருட்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பொருட்களை 100க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறு பிராண்டுகள், பெண் தொழில் முனைவோர், கைவினைஞர்கள், நெசவாளிகள் என பலதரப்பினர் இதில் பங்கேற்கின்றனர். சுமார் 400க்கும் மேற்பட்ட நகரங்களை சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகள் இதில் கலந்து கொள்கின்றன. 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பெண்களால் நடத்தப்படும் 500க்கும் மேற்பட்ட தொழில்கள் பங்கேற்கின்றனர். கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறு தொழில்களுக்கு இந்த சிறப்பு விற்பனை காலம் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.