Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே… உங்களுக்காக புதிய வெப்சைட்… விரல் நுனியில் எல்லாம் கிடைக்கும்… இத பயன்படுத்திகோங்க…!!!

விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு புதிய போர்ட்டல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் உணவு உண்ண கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பருவமழை பொய்த்துப் போவது, உற்பத்தி குறைவு, விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் இல்லை, கடன் பிரச்சனை, தற்கொலை போன்ற பல பிரச்சினைகளை விவசாயிகள் தினம் தினமும் சந்தித்து வருகின்றன. விவசாயிகளை பாதுகாக்கவும், வேளாண் தொழிலை முன்னேற்றுவதற்கு அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறிய பாடில்லை.

இதனால் வேளாண் உற்பத்தியை மேம்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கிசான் சாரதி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள போர்ட்டல் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த போர்ட்டலை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். ஜூலை 16ஆம் தேதி இந்த போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போர்ட்டலில் பயிர் உற்பத்தி, சந்தை விற்பனை விலை, பொருட்களின் விலை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உற்பத்தியையும் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். பல்வேறு வகையான வேளாண் முறைகள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம். இந்த போர்ட்டலில் கிடைக்கும் தகவல் மூலம் தங்களது விளைபொருட்களை தகுந்த இடத்தில் நல்ல விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து கொள்ள முடியும். வாங்குபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Categories

Tech |