இந்தியாவில் ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது .
ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது. அந்தவகையில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலையை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. மேலும், ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட் போன் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்த விலை குறைப்பு அமலாகியுள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமரா மற்றும் 5 000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் , ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட் போன் 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடலு டன், ரூ. 7,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒப்போ எஃப்11 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. என இரு வேரியன்ட்களில் , ரூ. 16,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த இரு ஸ்மார்ட் போன்களின் விலை குறைப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர்.