தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களில் நிறைய இருக்கைகள் நிரம்பாமல் காலியாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்டு 15 நாட்களாகியும் இன்னும் முன்பதிவு நிரம்பவில்லை. எனவே நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் உடனே முன்பதிவு செய்யுங்கள். இது ஒரு அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.