spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் அதிசயமான spanish தீவுகள் இன்று காலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளின் பட்டியலில் இருந்துள்ளது. இதன் பின்னர் Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த Amber நாடுகளின் பட்டியல்களில் சேர்க்கப்பட்டதனால் spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இரண்டு கொரோனா பரிசோதனைகளை செய்ய பணம் செலுத்த வேண்டும். இதனையடுத்து சோதனையில் நெகட்டிவ் காண சான்றிதழை பயணத்தின் போது காட்டப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் Amber நாட்டு பட்டியலில் உள்ள தீவுகளில் இருந்து வரும் பிரித்தானியர்கள் 10 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்படாவிட்டால் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.
இந்த செய்தி குறித்து விடுமுறைக்காக சென்ற பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காலக்கெடு முடிவதற்குள் தீவுகளில் இருந்து அனைவரும் பிரித்தானியா வருவதற்காக விமான நிலையங்களில் காத்து கிடந்துள்ளனர். இதனால் பிரித்தானியாவிற்கு அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டு உள்ளன. மேலும் பிரான்சில் இருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு பீட்டா வைரஸ் தொற்று காரணமாக பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.