நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 3 முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மூன்றுமே மிக குறைந்த நாட்களே நடத்தப்பட்டது. இந்த முறை நடக்கு இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் மழை என்பதால் நாடாளுமன்ற வாழகத்தில் பிரதமர் மோடி குடை பிடித்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தடுப்பூசி என்பது மாபெரும் ஆயுதம். அதனை எடுத்துக் கொள்பவர்கள் பாகுபலி யாக மாறுவார்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இதுவரை 40 கோடி பேர் பலியாகியுள்ளனர். எனவே தடுப்பூசிதான் நமக்கு பாதுகாப்பு அளிக்கும். அனைவரும் தடுப்பூசி போட்டு பாகுபலியாக மாறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.