அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 33.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 33,77,40,358 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மொத்தம் 33,72,39,448 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி தகவல் வெளியானது. மேலும் இதுவரை 18,60,38,501 பேர் அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 16,12,32,483 பேர் போட்டுக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.