தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம மதிப்பில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge1.tn.nic.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அன்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.