Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு கொடுக்கிறியா? இல்லையா?… வாலிபரின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!!

நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜ்குமார் தூத்துக்குடி பகுதியில் நடந்தது சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக நடந்து சென்ற ஒருவரிடம் ராஜ்குமார் திடீரென கத்தியை காட்டி பணம் கொடுக்கிறாயா இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக ராஜ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |