பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று லீட்சில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 200 ரன்களில் ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 36 பந்துகளில் 59 ரன்களும், மொயின் அலி 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மொகமது ஹஸ்னன் 3 விக்கெட்டும் , இமாத் வாசிம் மற்றும் ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 201 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 37 ரன்களும்,ஷதாப் கான் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது .இதன் மூலம் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது . இங்கிலாந்து தரப்பில் சாகிப் மக்மூத்3 விக்கெட்டும், அடில் ரஷீத் மற்றும் மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .இந்தத் தொடரில் ஆட்டநாயகனுக்கான விருது மொயின் அலிக்கு அளிக்கப்பட்டது.