Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அரசு நேரடி கொள்முதல் நிலையம்” தேங்கி கிடந்த நெல் மூட்டைகள்…. கலெக்டரின் அறிவுரை….!!

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டது. அதில் 14,016 டன் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்திட நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 14,016 டன் நெல் மூட்டைகள் முழுவதும் பாதுகாப்பாக திறந்தவெளி சேமிப்பு மையம் சேமிப்பு மையம், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நெல் அரவைக்காக  உள்மண்டலம், அயல் மண்டலங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இந்தப் பருவத்தில் தற்போது வரை கொள்முதல் செய்துள்ள 26,042 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்து என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் அடையாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மேலாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், துணை மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர் மூர்த்தி மற்றும் அலுவலர்கள் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |