நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த காவல்துறையினர் 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ள பெரிய சித்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் தாக்கூரின் உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி மணிமாறன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது பெரிய சித்தம்பட்டியை சேர்ந்த ராகு என்பவர் அவரது வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து 1,100 லிட்டர் சாராய ஊறலை அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து ராகு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.