Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு பணம் கட்டுங்க…. வாலிபரின் தில்லுமுல்லு வேலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லேப் டெக்னீசியன் போல் நடித்து அரசு மருத்துவமனையில் மர்ம நபர் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு உதவியாக அவரது உறவினர் ராஜு என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜுவிடம் மர்ம நபர் ஒருவர் தான் லேப் டெக்னீசியனாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் ராஜுவிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் மீது ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனை காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின் காவல்துறையினர் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பசுபதிபாளையம் பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்து குணமடைந்த பின் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து நோயாளிகளின் உறவினர்களிடம் சாதூர்யமாக பேசி பணம் பறிப்பதை இந்த நபர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் இதுவரை இந்த நபர் மீது முறையாக யாரும் புகார் அளிக்காததால் காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |