Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்… வைரலாகும் புகைப்படம்…!!!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் உதயநிதி தற்போது ஏஞ்சல், ஆர்டிகிள் 15 பட ரீமேக், கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் கலையரசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

bigboss celebrity act with udhaynidhi stalin movie

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆரவ்  உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . நடிகர் ஆரவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |