Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…? சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்த பிறகு முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில்,” தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்ததாகவும், சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற சொல்லுக்கே இடமில்லை என தெரிவித்தார். இதையடுத்து தமிழக பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தொடர் ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் மேகதாது அணை கட்டப்பட்டால், அது எப்படி எதிர்ப்பது என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |