இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Upholding the Spirit of Cricket! 😌
Lovely gesture by Krunal 👏🏽Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! 📺#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #KrunalPandya pic.twitter.com/REg3TB2Yu9
— Sony Sports Network (@SonySportsNetwk) July 18, 2021
இதில் போட்டியின் 22- வது ஓவரில் இலங்கைக்கு எதிராக கருணாஸ் பாண்டியா பந்துவீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா ,ஸ்ட்ரைட் டிரைவ் திசையில் அடித்தார். உடனே பந்தை க்ருணால் பாண்டியா டைவ் அடித்து பிடித்தபோது ,நான் ஸ்டைக்கர் என்டில் நின்று கொண்டிருந்த இலங்கை வீரர் சரித் அசலங்காவின் மேல் மோதுவது போல சென்றதை சுதாரித்துக் கொண்ட க்ருணால் பாண்டியா உடனே எழுந்துவிட்டார். இதன்பிறகு இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இதனைக் குறிப்பிட்டு ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடுவதால் க்ருணால் பாண்டியா இதுபோல் நடந்து கொண்டுள்ளார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
The discipline, love and care for opponent under Rahul Dravid. pic.twitter.com/U9I8GHpP4Y
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 18, 2021