Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி அசத்தல் பேட்டிங்…. இந்திய அணி அசத்தல் வெற்றி..!!

இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது..

Image

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்  52 (37) ரன்களும் , பவுமாவும் 49 (43) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Image

இதையடுத்து  150 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ஆண்ரிச் நார்ஜே  வீசிய 2வது ஓவரில் ரோகித்சர்மா  2 சிக்ஸர் விளாசி மிரட்டினார்.  இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஷிகர் தவான் பவுண்டரியாக விளாசினார். அதன்பிறகு பெலுக்வாயோ ஓவரில் ரோகித் சர்மா 12 ரன்னில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

Image

அடுத்து இறங்கிய கேப்டன் கோலியும், ஷிகர் தவானும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய தவான் 40 (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த ரிஷாப் பன்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.  இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயரும், கோலியும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர்.

Image

விராட் கோலி அரைசதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 72* (52) ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர் ) , ஸ்ரேயாஸ் ஐயர் 16* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சௌத் ஆப்பிரிக்க அணி சார்பில்  பெலுக்வாயோ மற்றும் பார்ஜுன் ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Categories

Tech |